Skip to main content

கணவனை முதுகில் சுமந்து வந்த மனைவி! 

Published on 05/04/2018 | Edited on 05/04/2018

 

The wife who carried her husband on her back

உத்திர பிரதேசத்தில் உள்ள மதுராவில்  கணவனுக்கு மாற்றுத் திறனாளி சான்றிதழ் வாங்குவதற்காக மாவட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு இடது கால் இழந்த கணவனை தன் முதுகில் சுமந்து வந்தார் மனைவி.

 உத்திர பிரதேசத்தில் உள்ள மதுராவைச் சேர்ந்தவர் விமலா தேவி. இவரது கணவர் பதன் சிங், லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்தவர். சில மாதங்களுக்கு முன்பு ஒரு சில மருத்துவ பிரச்சினைகள் காரணமாக அவரது இடது கால் அகற்றப்பட்டது. அதனால் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெறுவதற்காக தன் கணவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி அழைத்து வராமல் தன் முதுகில் சுமந்து வந்துள்ளார்.
 

காரணம் கெட்டவர்களிடம் விமலா கூறியது, "இந்த சான்றிதழ் வாங்குவதற்காக பல முறை பல அரசு அலுவலகங்களுக்கு நான் என் கணவருடன் இப்படித்தான் செல்கிறேன். மாற்றுத்திறனாளி சான்றிதழ் இருந்தால்தான் சக்கர நாற்காலி அளிப்பார்கள். இன்னும் எங்களுக்கு சான்றிதழே வழங்கவில்லை" என்றார்.
 

இந்த சம்பவம் குறித்து உத்திரபிரதேச உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆர். பூப்பந்த் சௌத்ரி கூறியது, "நாகரிக உலகத்தில் நடக்கும் ஒரு சோகமான சம்பவம் இது. இதை ஆய்வு செய்து அதன்படி உதவி செய்வோம்." 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதட்சனை தராததால் திருமணத்தை நிறுத்திய மணமகனின் தலை மொட்டை...!

Published on 22/10/2018 | Edited on 22/10/2018

 

mm

 

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில், இன்று திருமணம் நடக்கவிருந்த திருமண வீட்டில், மணமகன் பெண் வீட்டாரிடம் இரு சக்கர வாகனம், தங்க நகை ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டுள்ளார். ஆனால் அவற்றை இப்போதைக்கு தரமுடியாது என மணமகள் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு ஆத்திரமடைந்த மணமகள் உறவினர்கள் மணமகனைப் பிடித்து மொட்டையடித்துள்ளனர்.

Next Story

அம்பேத்கர் சிலைக்கு பாதுகாப்பு! 

Published on 13/04/2018 | Edited on 13/04/2018

உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாடாவ்ன் மாவட்டத்தில் கெடி சௌக் ஏரியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு இரும்பினால் செய்யப்பட்ட கேட் போடப்பட்டு அதற்கு காவலர் ஒருவரும் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

 

Defense of Ambedkar statue


தற்போது அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி வீரேந்திர சிங் யாதவ் கூறியது : 
 

நாளை அம்பேத்கர் ஜெயந்தி என்பதால் ஒரு சில சமூக விரோதிகள் சிலையை உடைத்து சேதப்படுத்தக்கூடும். அதனால் 24 மணி நேரமும் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 

இதற்கு முன் சென்ற வாரம் இதே மாவட்டத்தில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் வைத்த அம்பேத்கர் சிலைக்கு காவி நிறம் பூசியது பெரும் சர்ச்சையானது. அதற்கு பிறகு நீல நிறம் பூசப்பட்டது.