Skip to main content

மேடம் ஆட்சியில் இல்லாத குடும்பத்திற்கு ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டது- பிரதமர் மோடி

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
modi


ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று கோட்டா பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், சோனியா காந்தியை மேடம் ஆட்சி என்று விமர்சித்துள்ளார். 
 

“எங்களது ஆட்சி வந்ததும் முதலில் ஊழலை பற்றி புலனாய்வு செய்து சரி பார்த்தோம். அதனால் ஊழல்வாதிகளின் பாக்கெட்டுக்கு செல்லும் 90,000 கோடி ஊழல் பணம் சேமிக்கப்பட்டுள்ளது”என்று மோடி கூறினார்.
 

மேலும், ”ரிமோட் கண்ட்ரோல் மூலம் மேடம்(சோனியா காந்தி) ஆட்சி செய்தபோது, பிறக்காத பெண் குழந்தை விதவை ஆகிவிட்டதாக சொல்லி பென்சன் வாங்கப்பட்டது. இல்லாத குடும்பத்திற்கு ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டது. பள்ளிகளில் பிறக்காத குழந்தைக்கு ஷ்காலர்ஷிப் கொடுக்கப்பட்டது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை” காங்கிரஸ் மீது மோடி வைத்தார்.

 


 

சார்ந்த செய்திகள்