புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் இடம்பெற்ற உலக வரைபடத்தில் இந்தியாவில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதி பாதி மறைக்கப்பட்டிருந்தது.
இதனைச் சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “இந்த வீடியோவில் இந்திய வரைபடம் தவறாக உள்ளது. இதை வாட்ஸ்ஆப் நிறுவனம் விரைவில் சரி செய்ய வேண்டும். இந்தியாவில் வர்த்தகத்தைத் தொடர வேண்டும் என்றால், அனைத்து விதமான நிறுவனங்களும் இந்திய வரைபடத்தைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.” என்று கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்தப் பதிவைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் நிறுவனம், அந்த வீடியோவை ட்விட்டரில் இருந்து நீக்கியது. மேலும், “எதிர்பாராமல் தவறு நடந்துவிட்டது. எங்களை மன்னிக்கவும். தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வீடியோவை நீக்கிவிட்டோம். இனிவரும் காலங்களில் கவனத்தோடு செயல்படுவோம்.” என்று பதிலளித்துள்ளது.
Thank you Minister for pointing out the unintended error; we have promptly removed the stream, apologies. We will be mindful in the future.— WhatsApp (@WhatsApp) December 31, 2022