உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 8:30 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் வகித்து வந்த நிலையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. உத்தரகாண்டில் பாஜகவும் மணிப்பூர், கோவாவில் காங்கிரசும் முன்னிலையில் உள்ளது.
ஒருபுறம் தேர்தல் முடிவுகள், முன்னனி நிலவரங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் மறுபுறம் முக்கிய அறிவிப்பு ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ரேஷன் கார்டு உள்ளிட்ட திட்டங்கள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த நாங்கள் தயார் என இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என அரசியல் சாசனத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.