Published on 05/10/2018 | Edited on 05/10/2018

நேற்று டெல்லி வந்தடைந்த புதினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பின்னர், நரேந்திர மோடியை இரவு விருந்திற்காக சந்தித்தார்.
இந்நிலையில், இன்று காலை டெல்லியில் இருக்கும் ஹைதராபாத் வீட்டில் பிரதமர் மோடியை சந்தித்தார் விளாடிமிர் புதின். ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ்400 வகை ஏவுகணையை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து பிரதமர் மோடியிடம் பேசிய புதின், மோடியை ரஷ்யா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.