ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு (UPSC Prelims Exam 2020) நாடு முழுவதும் இன்று (04/10/2020) நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 72 நகரங்களில் 2,569 மையங்களில் நடைபெறும் தேர்வை சுமார் 10.58 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.
இன்று காலை 09.30 மணிக்கு முதற்கட்ட தேர்வும், பிற்பகல் 02.30 மணிக்கு இரண்டாம் கட்டத் தேர்வும் நடத்தப்படுகிறது. தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பு வரை மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும், கரோனா தடுப்பு முறையைப் பின்பற்றவும்,ஹால்டிக்கெட், அடையாள அட்டை ஆகியவற்றைக் கட்டாயம் எடுத்து வர யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணிந்து, ஹால் டிக்கெட்டுடன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக மே 31, ஜூன் 5 என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.