நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 24 பல்கலைக்கழகங்கள் அனுமதியின்றி செயல்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த யூஜிசி அறிவிப்பில், குறிப்பிட்ட இந்த பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்களின் சான்றிதழ்கள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எட்டு பல்கலைக்கழகங்கள் அனுமதியின்றி செயல்படுவதாகவும், அதற்கடுத்து டெல்லியில் ஏழு பல்கலைக்கழகங்கள் போலியானது எனவும் கூறப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் தலா ஒரு பல்கலைக்கழகம் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போலி பல்கலைக்கழக வரிசையில், புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாடமியும் இடம்பெற்றுள்ளது.