Skip to main content

முதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு...

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


உத்தவ் தாக்கரே மகாராஷ்ட்ரா முதல்வராகப் பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் ஆகியுள்ள சூழலில், சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்படவுள்ளார். 

 

uddhav thackeray in going to be mlc

 

 

மஹாராஷ்ட்ராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்ட்ரா முதல்வராகப் பொறுப்பேற்றார்.

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாத உத்தவ் தாக்கரே, நேரடியாக முதல்வர் ஆனதால், அடுத்த ஆறு மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினர் அல்லது மேலவை உறுப்பினர் ஆகவேண்டும் என்ற சூழல் உருவானது. அம்மாநிலத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதால், அதில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகத் திட்டமிட்டிருந்தார் உத்தவ் தாக்கரே. இதற்கான தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
 

http://onelink.to/nknapp


இந்நிலையில், கரோனா பரவல் காரணமாகத் தற்போது இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், இன்னும் ஒரு மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினர் அல்லது மேலவை உறுப்பினர் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய சூழலில், ஒரு மாதத்திற்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்பதால், மேலவை உறுப்பினராக முடிவெடுத்துள்ளார் உத்தவ் தாக்கரே. இதற்கு ஏதுவாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எம்எல்சி பதவிக்கு உத்தவ் தாக்கரே பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்