பெங்களூரில் விவேக் நகரில் உள்ள இராணுவ வளாகத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் சக இராணுவ வீரரை எரித்து கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முரளி கிருஷ்ணா(29) மற்றும் தன்ராஜ் (25) இவர்கள் இருவரும் ஆந்திரபிரதேசத்தில் உள்ள ஸ்ரீகுல்குளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரும் இராணுவ வீரர்கள். இதில் முரளிகிருஷ்ணா மீது ஏற்கனவே இராணுவ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சாட்சியாக இருந்த உத்திர பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் (26) என்பவரை இருவரும் சேர்ந்து அடித்துக்கொன்று பின்பு ஆதாரத்தை மறைக்க எரித்துள்ளனர்.
இந்தக் கொலை குறித்து காவல்துறை மார்ச் 23 ஆம் தேதி முரளிகிருஷ்ணா மற்றும் தன்ராஜ் இருவரும் பங்கஜ் அறைக்கு சென்று பங்கஜுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இவர்கள் சொல்வதை ஏற்க மறுத்த பங்கஜை அடித்துக்கொன்று பின்னர் அங்கிருந்து சிறிதுதூரத்தில் உள்ள டொமளுர் என்ற இடத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் போட்டு எரித்துள்ளனர். ஆனால் அந்த உடல் முழுவதுமாக எரிவதற்கு முன்பு அதனை எடுத்து வந்து மீண்டும் பங்கஜ் அறையில் சடலத்தை போட்டுவிட்டனர். பின்னர் பங்கஜ் சடலத்தைக்கண்டு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. நாங்கள் மோப்பநாய்கள் கொண்டு இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளோம் என்று கூறினர்.
தற்போது இவர்கள் மீது கொலை, சதி, ஆதாரத்தை அழித்தல் என்று மூன்று பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.