Skip to main content

துணை கலெக்டர் பொறுப்பை ஏற்றார், பி.வி.சிந்து

Published on 11/08/2017 | Edited on 11/08/2017
துணை கலெக்டர் பொறுப்பை ஏற்றார், பி.வி.சிந்து

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு ரூ.3 கோடி மற்றும் வீட்டு மனையை பரிசாக வழங்கியதுடன், குரூப்–1 அதிகாரி பதவி அளிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. 

கடந்த மாதம் 27–ந் தேதி பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பி.வி.சிந்து ஆந்திர தலைமை செயலகத்தில் உள்ள நில நிர்வாக தலைமை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு தனது பெற்றோருடன் சென்றார். அந்த அலுவலகத்தில் பி.வி.சிந்து முறைப்படி தனது பதவி பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்திட்டார். அவருக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்