Skip to main content

நாளை சந்திர கிரகணம் இந்தியாவில் காண முடியும்

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
நாளை சந்திர கிரகணம் இந்தியாவில் காண முடியும்

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியும். நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் நாளை நடக்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் என  கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் தேபிபிரசாத் கூறி உள்ளார். அவர் கூறுகையில், சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 10.52 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12.48 மணி வரை நீடிக்கும். முழு கிரகணம் 11.50 மணிக்கு ஏற்படும் என்றார்.

சார்ந்த செய்திகள்