பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் விரைவில் இணைக்கப்பட உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று அறிவித்துள்ளார். இவ்வாறு இணைப்பதன் மூலம் கடன் வசதிகளை அதிகப்படுத்தவும், பொருளாதாரத்தில் வளர்ச்சியும் பெற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன் மகிலா வங்கி உள்ளிட்ட ஐந்து வங்கிகள் இணைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, தற்போது இந்த மூன்று வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இப்படி இணைப்பதன் மூலம் நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுக்கும்.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,” இந்த மூன்று அரசு வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் வங்கிகள் இன்னும் வலிமை பெறும், மக்களுக்கு அதிகப்படியான கடன்களை வழங்கி உறுதியாக இருக்கும். தற்போது வங்கிகள் உள்ள நிலையில், கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கின்றது. இதனால், கார்ப்ரேட்டுகளின் முதலீடு பாதிப்படைகிறது. ஆகவே இந்த மூன்று வங்கிகளை இணைப்பதன் மூலம் வங்கிச் செயல்பாடு வலுப்பெறும்” என்றார்.