இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தற்போது பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்துவருகிறது. இது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
தொற்றிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?
இதற்கு மந்திரக்கோல் எதுவுமில்லை. ‘அடிப்படையைப் பின்பற்றுவோம்’ என்பதே அந்த மூன்று தாரக மந்திரங்கள். 1. முகக்கவசம் அணியுங்கள, 2. தனிநபர் இடைவெளி அவசியம், 3.கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
காற்றில் உலவும் பனிப்படலம் மூலமாகவே பெருமளவில் தொற்று பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், முகக்கவசங்களே பெரும் பாதுகாப்பு. மீண்டும் பயன்படுத்த ஏதுவான சரியாக பொருந்தும் என்- 95 முகக்கவசங்கள் சிறப்பு.