Published on 05/08/2022 | Edited on 05/08/2022

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார்.
இந்த நிலையில், சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க லஷ்கர், ஜெய்ஷ்-இ முகம்மது தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக 10 பக்க அறிக்கையை டெல்லி போலீசாருக்கு வழங்கியுள்ள மத்திய உளவுத்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் கவனத்துடன் செய்யும்படி டெல்லி போலீசாரை அறிவுறுத்தியுள்ளது.மேலும், இந்த எச்சரிக்கையானது பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.