ஆந்திராவில் வேலைவாய்ப்பை பெற தெலுங்கை கட்டாயமாக்க வேண்டும்: வெங்கய்யா நாயுடு
ஆந்திர மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை பெற தெலுங்கை கட்டாயமாக்க வேண்டும் என துணைகுடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெங்கய்யா நாயுடு,
நான் எந்த மொழிக்கும் எதிரானவன் இல்லை. தாய் மொழியை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஆந்திராவில் தெலுங்கை கட்டாயமாக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை பெற தெலுங்கை கட்டாயமாக்க வேண்டும். தாய்மொழியை கற்பது பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.