Skip to main content

பணியைப் பறித்த கரோனா... வாழைப்பழ வியாபாரியான ஆசிரியர்... நெகிழவைத்த முன்னாள் மாணவர்களின் உதவி...

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

telugu teacher selling banana in streets due to covid layoff


கரோனா பாதிப்பால் தனியார் பள்ளியில் 15 ஆண்டுகாலமாகப் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் வேலை இழந்ததால், தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். 
 


நெல்லூரைச் சேர்ந்த வெங்கட சுப்பையா என்பவர் கடந்த 15 ஆண்டுகளாகத் தனியார்ப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். கடைசியாக நெல்லூரைச் சேர்ந்த நாராயணா பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கட சுப்பையா, ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். அப்போது திடீரென ஒரு நாள், அவரை தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம், அவரது பணியில் திருப்தி இல்லை எனக்கூறி அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதனையடுத்து, குடும்ப சூழ்நிலை காரணமாகத் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கத் தொடங்கியுள்ளார் வெங்கட சுப்பையா.

இந்நிலையில் தங்களது ஆசிரியருக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து அறிந்த அவரின் முன்னாள் மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் மொத்தமாக 86,300 ரூபாயை அவருக்கு வழங்கி உதவி செய்துள்ளனர். இதனால் நெகிழ்ச்சியடைந்துள்ள வெங்கட சுப்பையா இதுகுறித்து கூறுகையில், "எனக்குப் பணம் கொடுக்க வேண்டாம், அதனை உங்களது எதிர்காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என முன்னாள் மாணவர்களிடம் கூறினேன். ஆனால் விடாப்பிடியாக அவர்கள் எனக்குப் பணம் கொடுத்துவிட்டனர். எங்களைப் போன்றவர்களுக்கு அரசு உதவ வேண்டும். குடும்பச் சூழல் காரணமாகவே தற்போது வாழைப்பழம் விற்கிறேன். ஆனால் விரைவில் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்