Published on 01/02/2019 | Edited on 01/02/2019
மத்திய பாஜக அரசு இன்று தனது இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சையில் உள்ளதால், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது முதல் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை தெலுங்கு தேசம் கட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடையுடன் தெலுங்கு தேச கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி தெலுங்கு தேச கட்சி எம்பிக்கள் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.