Published on 21/09/2019 | Edited on 21/09/2019
அமெரிக்காவுக்கு ஒருவாரம் அரசுமுறைப்பயணமாக பிரதமர் மோடி நேற்றிரவு புறப்பட்டார்.

இந்நிலையில், அவர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, விமானம் சரிசெய்யப்பட்டு, பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார். நடுவானில் ஏற்பட்ட இந்த பழுது காரணமாக அவரது விமானம் 2 மணிநேரம் தாமதமாக அமெரிக்கா பயணித்தது. வரும் 22-ம் தேதி டெக்சாஸில் நடைபெறும் ஹவுதி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.