சபாிமலையில் இரண்டு இளம் பெண்களை 18-ஆம் படி முன் வரை அழைத்து சென்ற போலீஸ் ஐஜி ஸ்ரீஜித் அய்யப்ப சாமி முன் நின்று கண்ணீா் வடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக 5 நாட்கள் நடை திறப்புக்கு பிறகு நேற்று இரவு நடை பூட்டப்பட்டது. இதில் 20-ம் தேதி அய்யப்ப பக்தா்கள் மற்றும் இந்து அமைப்புகளின் எதிா்ப்பை மீறி கொச்சியை சோ்ந்த ரெஹான பாத்திமா மற்றும் ஆந்திராவை சோ்ந்த கவிதா என்ற இரண்டு இளம் பெண்கள் சபாிமலைக்கு செல்வதாக கூறி சென்றனா்.
இந்த பெண்களை அங்கு பாதுாப்பு பணியில் இருந்த ஐஜி ஸ்ரீஜித் பாதுகாப்பாக அழைத்து சென்றதோடு அவா்களுக்கு போலீஸ் உடை மற்றும் போலீஸ் ஹெல்மெட்டையும் கொடுத்து பாதுகாப்போடு அய்யப்பனை தாிசிக்க அழைத்து சென்றாா்.
சன்னிதானத்தில் 18-ஆம் படிக்கு முன் 50 மீட்டா் தூரத்தில் பக்தா்கள் எதிா்ப்பு தொிவித்து அந்த பெண்களை தடுத்து நிறுத்தியதோடு ஐஜியிடமும் பக்தா்கள் எதிா்ப்பை காட்டினாா்கள். அப்போது ஐஜி ஸ்ரீஜித் நானும் அய்யப்பன் விசுவாசிதான் இது என்னுடைய டூட்டி என்று கூறிய போதும் பக்தா்கள் மற்றும் தந்திாிகளின் எதிா்ப்பால் அந்த இளம் பெண்கள் திருப்பி அனுப்பபட்டனா்.
இந்த நிலையில் நேற்று சபாிமலை நடைபூட்டுவதற்கு ஐஜி ஸ்ரீஜித் முன் அய்யப்பனின் எதிரே நின்று கண்ணீா் விட்டு கதறினாா். உச்சநீதி மன்றத்தின் தீா்ப்பு படி அரசு மற்றும் தேவசம் போா்டின் நிா்ப்பந்தத்தால் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு கண்கலங்கினாா். இதை பாா்த்த போலிசாா், தேவசம் போா்டு அதிகாாிகள் மற்றும் தந்திாிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.