Published on 03/08/2018 | Edited on 03/08/2018

மத்திய இணை மந்திரியான ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் பேசும் பொழுது,
நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகம்தான் சிறந்த இடம். கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழகத்தில் மேற்கொண்ட கருத்துகணிப்பு கூட்டத்தில் அதிகமானோர் நியூட்ரினோ திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகத்திலுள்ள தேனி ,மதுரை மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளில் இதுகுறித்த கலந்துரையாடல்களும் நடைபெற்றது.
நில அதிர்வு, சுற்றுசூழல் தாக்கம் குறைவு, புவியில் குறியீடு போன்ற காரணிகளை வைத்து பார்க்கும்பொழுது தமிழ்நாடுதான் நியூட்ரினோ திட்டத்திற்கு சரியான இடம் எனக்கூறியுள்ளார்.