Skip to main content

‘எங்கள் மருத்துவமனைகளைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்’ - யோகிக்கு சிபிஎம் அழைப்பு!

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
‘எங்கள் மருத்துவமனைகளைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்’ - யோகிக்கு சிபிஎம் அழைப்பு!

பாஜகவின் ஜன்ரக்‌ஷா யாத்திரை கேரள மாநிலத்தில் வரும் அக். 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், கேரள பாஜகவைச் சேர்ந்தவர்களும், நாடு முழுவதும் உள்ள பாஜக மூத்த தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
இந்நிலையில், இந்த ஜன்ரக்‌ஷா யாத்திரையில் கலந்துகொள்வதற்காக உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கேரளா வருகை தந்துள்ளார். இவரது வருகைகுறித்து சிபிஎம் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ‘கேரளாவிற்கு வருகை தந்திருக்கும் உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வரவேற்கிறோம். இங்குள்ள மருத்துவமனைகளைப் பார்த்தாவது, மருத்துவமனைகளை எப்படி தரமானவையாக பராமரிக்கவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்’ என பதிவிடப்பட்டிருந்தது.

இதே பதிவை ரீட்விட் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான சீத்தாராம் யெச்சூரி, ‘யோகி தனது சக பாஜக தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களையும் கூட அழைத்துவந்து, எப்போதும் பாஜகவை நிராகரிக்கும் மக்கள் வசிக்கும் கேரளாவின் அரசாட்சியிடமிருந்து நல்லாட்சியைக் கற்றுக்கொள்ளலாம்’ என பதிவிட்டுள்ளார்.

பாஜக நடத்தும் இந்த யாத்திரையில் தீவிர இந்துத்துவ முழக்கங்களை எழுப்பப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்