17-வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் முதல் மே வரை ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. அரசியல்கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டனர். நேரில் சென்று பிரச்சாரம் செய்வதைவிட இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளத்தில் செய்யப்படும் பிரச்சாரம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளம் மாறிவருகிறது.
இது ஒருவகையில் நல்ல விஷயம் என்றாலும் மறுவகையில் அதிகப்படியான போலி செய்திகளும் சென்று சேர்ந்து தவறான தகவல்களும் மக்களிடத்தில் சென்று சேருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏற்கனவே மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டு சில நடவடிக்கைகள் எடுத்துவரப்படுகிறது. இந்த நிலையில் தற்போது, சமூக வலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் சமூக வலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆதாயத்திற்காக சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் தேர்தல் ஆணையம், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதை தேர்தல் ஆணையம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளது. குறைகளை தெரிவிக்க சமூக வலைதளங்கள் தனி அமைப்பை ஏற்படுத்துவது, கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட விளம்பர வருவாயை தெரிவிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.