Published on 07/10/2018 | Edited on 07/10/2018

மத்தியபிரதேச மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
போபாலில் உள்ள மாடல் சாலையில் ராகுலை வரவேற்கும் விதமாக சாலை நெடுகிலும் கட்சி கொடிகளுடனும், வண்ண வண்ண பலூன்களுடனும் தொண்டர்கள் காத்து இருந்தனர்.
ராகுல்காந்தி திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சில தொண்டர்கள் ராகுல்காந்திக்கு ஆரத்தி எடுப்பதற்காக வாகனத்தை நோக்கி வந்தனர்.
ஆரத்தி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக ஆரத்தி தட்டில் உள்ள நெருப்பு அருகில் உள்ள பலூன் மீது படவே தீ பற்றிக்கொண்டது. தீ பலூன் மீது படவே பட படவென வெடித்து சிதறியது.
ஆனால் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து ராகுல்காந்தி சற்று தள்ளி இருந்தார். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.