வீட்டில் கழிவறை கட்டினால் இவ்வளவு மிச்சப்படுத்தலாம்! - யுனிசெப் தகவல்
நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில் பலவிதமான விளம்பரங்களும், விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கழிவறை கட்டினால் பொருளாதார ரீதியில் நிறையவே மிச்சப்படுத்தலாம் என ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதி தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து 12 மாநிலங்களில் உள்ள 10000 வீடுகளில் ஆய்வு நடத்திய யுனிசெப், வீட்டில் கழிவறை கட்டுவதற்காக செலவிடும் ஒரு குடும்பம், ஆண்டொன்றுக்கு ரூ.50,000 மிச்சப்படுத்தலாம். தூய்மைக்காக செலவிடும் ஒரு ரூபாய் ரூ.4.30-ஐ சேமிக்க உதவும் என தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு சுற்றுப்புறச்சூழலில் சுகாதார மேம்பாட்டின் மூலம் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிவதற்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறையின் செயலாளர் பரமேஸ்வரன் அய்யர் இதுகுறித்து பேசுகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 200 மாவட்டங்களில் உள்ள 2.4 லட்சம் வீடுகள் திறந்தவெளிக் கழிப்பிடங்களைத் தேடிச்செல்லாத நிலை உருவாகியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்