Skip to main content

இரண்டு தலைகள் கொண்ட அதிசய பாம்பு... வைரலாகும் வீடியோ!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020


இரண்டு தலைகளை கொண்ட பாம்பு ஒன்றின் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் காடுகள் அடர்ந்து காணப்படுகின்ற மாநிலங்கலில் ஓடிசா மாநிலம் மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. மாநிலத்தில் பெரும்பகுதி வனத்தினால் ஆனது. இதனால் காட்டு விலங்குகள் மற்ற மாநிலங்களை விட அதிகம் காணப்படும். இந்நிலையில் இரட்டை தலைகளைக் கொண்ட பாம்பு ஒன்று அம்மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


அம்மாநிலத்தில் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள டென்கோட் வனப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இரட்டை தலை கொண்ட பாம்பு ஒன்று பிடிப்பட்டுள்ளது. இது ஓநாய் வகையைச் சார்ந்த பாம்பு என்றும், இதில் விஷத்தன்மை இருக்காது என்றும் வனதுறையினர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பாம்பில் உள்ள இரண்டு தலைகளும் தனித்தனியாக இயங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

 

சார்ந்த செய்திகள்