இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. தினமும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ஏழை பாழைகள் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகிறார்கள். தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் வேலையில்லாமல் என்ன செய்வது புரியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
பிள்ளைகள் வைத்திருப்பவரின் பாடு மேலும் திண்டாட்டமாகி வருகின்றது. அதுவும் ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் தேவைப்படுவதால் பிள்ளைகளுக்கு போன் வாங்கி கொடுக்க பெற்றோர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பீகாரை சேர்ந்த இன்குலாப் என்ற நபர் பத்தாவது படிக்கும் தன்னுடைய மகனுக்காக வீட்டிற்கு அருகில் இருந்த இடத்தை விற்று போன் வாங்கி கொடுத்துள்ளார். ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்கு பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு போன் வாங்கி கொடுக்க சொல்லியுள்ளது. குடும்ப நிலை அதற்கு ஒத்துவராத காரணத்தால் என்ன செய்வது என்று யோசித்த அவர், நிலத்தை விற்று மகனுக்கு போன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.