Skip to main content

சேவை வரி செலுத்தாத நடிகர்களுக்கு நோட்டீஸ்

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
சேவை வரி செலுத்தாத நடிகர்களுக்கு நோட்டீஸ்

உரிய சேவை வரி செலுத்தாத, பாலிவுட் நடிகர்கள், சல்மான் கான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், ரிதேஷ் தேஷ்முக், அர்ஜுன் ராம்பால் ஆகியோரிடம் விளக்கம் கோரி, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரிகள், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.நடிகர்கள் - பட தயாரிப்பாளர்கள் இடையே, போடப்படும் ஒப்பந்தப்படி, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரி, முறையாக செலுத்தப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் சிலர், குறைந்த வரி செலுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, பார்லிமென்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சி.ஏ.ஜி., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை: சேவை வரி ஏய்ப்பு குறித்த, 156 வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில், 50 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த படப்பிடிப்புக்கான சேவை வரியை, ஒழுங்காக செலுத்தாத அல்லது குறைவாக செலுத்திய, பிரபல பாலிவுட் நடிகர்கள், சல்மான் கான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், ரிதேஷ் தேஷ்முக் மற்றும் அர்ஜுவ் ராம்பால் உள்ளிட்டோர், 

சி.ஏ.ஜி.,யின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர். சேவை வரி செலுத்தாதது குறித்து, அவர்களிடம் உரிய விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. இது போன்ற பல வழக்குகள் விசாரணையில் உள்ளன. வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சார்ந்த செய்திகள்