Skip to main content

சாலை பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் குளிக்கும் கடல் கன்னி

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
சாலை பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் குளிக்கும் கடல் கன்னி



பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால், சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலை பள்ளங்களால் கார்கள் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. சாலை பள்ளங்களை மூட வேண்டும் என்று பெங்களூரில் ஆங்காங்கு மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். 

பெங்களூரின் மையப்பகுதியான கப்பன் பார்க் ஜக்ஷனும் சாலையிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஓவிய கலைஞர்கள் இணைந்து, சாலை பள்ளத்தில் குளம் போல தண்ணீர் வரைந்து, அதில் 'கடல் கன்னி' போன்ற வேடமணிந்த பெண் குளிக்கச் செல்வதை போன்று நாடகம் நடத்தப்பட்டது. அரசின் கவனத்தை ஈர்க்க இதுபோல பல்வேறு வகையான போராட்டங்கள் நடக்கின்றன.

சாலையில் உள்ள குழிகளை 15 நாட்களில் மூடும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்