மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இடைக்கால பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், சமீபத்தில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தின்போது வங்கிகளுக்கான கடன் வட்டிவிகிதம் 0.25% குறைக்கப்பட்டது. இந்த வட்டி விகிதம் குறைப்புப் பலன் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய வேண்டும். அதனால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி வீதங்களைக் குறைப்பது குறித்து அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் இயக்குநர்கள், சி.இ.ஓ மற்றும் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளோம் என்றார். இந்தக் கூட்டம் பிப்ரவரி 21-ம் தேதி நடக்கவிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.