Skip to main content

ஆணாக இருந்து பெண்ணாக மாறியதால் மாலுமி பணி நீக்கம்

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
ஆணாக இருந்து பெண்ணாக மாறியதால் மாலுமி பணி நீக்கம்

ஆணாக இருந்த போது பணியில் சேர்ந்துவிட்டு திடீரென பெண்ணாக மாறிய கப்பல் மாலுமி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மணீஷ் கிரி,25 விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பற்படை தளத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மாலுமியாக பணியில் சேர்ந்தார். 

இந்நிலையில் கடந்த வருடம் விடுமுறையில் சென்ற மணீஷ் கிரி, மீண்டும் பணியில் சேர்ந்த போது அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிய துவங்கியது. பணி நேரம் போக மற்ற நேரத்தில் சேலை அணிவது, பெண்கள் அணியும் மாடல் உடை அணியத் துவங்கினார். மணீஷ்கிரியின் செயலில் சந்தேகம் ஏற்படவே விசாரித்ததில் விடுமுறையில் சென்ற போது மும்பையில் மருத்துமனையில் ஒன்றில் பெண்ணாக மாறியதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து கப்பற்படை விதிமுறைகளை மீறியதாக அவரை கிழக்கு கடற்படை கமாண்டர் உத்தரவின் பேரில்  உடனடியாக அவரை பணி நீக்கம் செய்யபட்டார்.

சார்ந்த செய்திகள்