Skip to main content

ராயல் என்ஃபீல்டு வச்சு கெத்து காட்டுறீங்களா? - உங்களுக்கு ஒரு போட்டி வருது...

Published on 29/10/2018 | Edited on 29/10/2018

 

jj

 

இந்தியாவில் 1970-களில் தொடங்கி 90-களின் தொடக்கம் வரையில் இருசக்கர வாகன ஓட்டிகளின் முக்கிய தேர்வாக இருந்தது ஜாவா பைக். 90-களுக்கு பின் அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மூலம் ஜாவா பைக் விற்பனைக்கு வரவிருக்கிறது. 

 

jj

 

புதிய ஜாவாவின் இன்ஜின் 293 சி.சி திறன், 27 பிஎச்பி 6 கியர்கள் மற்றும் ஃபியூல் இன்ஜக்‌ஷன் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பழைய இன்ஜின் சி.சி 350 என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஜாவா நவம்பர் 15-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விலை இன்னும் அதிகரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளி போனஸில் திக்குமுக்காடிய ஊழியர்கள்!

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

The owner made the employees happy with a Diwali Gift

 

தீபாவளி பண்டிகையின் போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகை போனசாக வழங்குவது வழக்கம். இதில் சில தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பொருட்களாகவும் தங்களது தீபாவளி போனஸை வழங்குவது வாடிக்கை. அந்த வகையில், கோத்தகிரியில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட் உரிமையாளர், தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த மோட்டார் சைக்கிளை தீபாவளி பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். 

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், அந்தப் பகுதியில் தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி எனப் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். இவரது நிறுவனங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சிவக்குமார், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் ஆயுதபூஜை பண்டிகையின் போது தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 

 

இந்த நிலையில், இந்த வருடம் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையின் போது விலை உயர்ந்த பரிசைக் கொடுத்து விட வேண்டும் என்று எண்ணிய சிவக்குமார், தனது நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் 15 ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். பின்பு, அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்ட போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களைக் குறிப்பிட்டனர். அதனைக் கேட்டுக்கொண்ட சிவக்குமார் அவர்கள் விரும்பும் வாகனங்களை முன்பதிவு செய்து தனது நிறுவனத்திற்கு வரவழைத்துள்ளார். 

 

அதன் பின்னர் அவர், அந்த 15 ஊழியர்களையும் வரவழைத்து, தீபாவளி பரிசாக மோட்டார் சைக்கிள்களின் சாவிகளை அவர்களிடம் கொடுத்து இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். அத்துடன், அந்த 15 ஊழியர்களுடன் தானும் ஒரு வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார். இது தவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களையும், போனஸ் தொகையும் வழங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. 

 

 

Next Story

சாப்பிட்டால் போதும், புல்லட் கிடைக்கும்... உணவகம் நோக்கிப் படையெடுக்கும் பைக் பிரியர்கள்...

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

pune hotel announces 4 kg platter eating competition

 

தங்கள் உணவகத்திற்கு வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக உணவகம் ஒன்று வெளியிட்ட அறிவிப்பு, அந்த உணவகத்தை நோக்கி ஏராளமான வாடிக்கையாளர்களைப் படையெடுக்க வைத்துள்ளது. 

 

கரோனா பாதிப்பால் துவண்டு போயிருந்த தனது உணவக வியாபாரத்தை மீட்டெடுக்கும் வகையில், புதிய போட்டி ஒன்றை அறிவித்து வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது புனேவில் உள்ள உணவகம் ஒன்று. மகாராஷ்ட்ரா மாநிலம், புனே அருகே வாட்கான் மாவல் பகுதியில் அமைந்துள்ள சிவ்ராஜ் ஹோட்டல், அண்மையில் வாடிக்கையாளர்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதன்படி, அந்த உணவகத்தில் விற்பனை செய்யப்படும் 'புல்லட் தாலி' எனப்படும் உணவை ஒரு மணிநேரத்திற்குள் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ராயல் என்ஃபீல்ட் பைக் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

 

ரூ.2,500 விலையுடைய இந்த புல்லட் தாலியில், 4 கிலோ மட்டன் மற்றும் வறுத்த மீன்களால் செய்யப்பட்ட சுமார் 12 வகையான உணவுகள் பரிமாறப்படும். வறுத்த மீன், சிக்கன் தந்தூரி, உலர் மட்டன், கிரே மட்டன், சிக்கன் மசாலா மற்றும் இறால் பிரியாணி உள்ளிட்டவை அடங்கிய இந்த தாலியை ஒருமணி நேரத்திற்குள் உண்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், இப்போட்டியில் பங்கேற்க ஏகப்பட்ட பைக் பிரியர்கள் இந்த உணவகத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்ட்ராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சோம்நாத் பவார் என்பவர் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, புதிய ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை பரிசாக வென்றுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் அதுல் வைகர் தெரிவித்துள்ளார்.