மகராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் சிவசேனா கட்சி சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார் அப்போது அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் பாஜகவினர் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்த வேண்டும். ராமர் கோயில் விவகாரத்தை நாடாளுமன்றக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்றார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நல்லகாலம் வந்துவிடும் என்று வெற்றுவார்த்தை பேசினீர்கள் அதனை பொறுத்துக்கொண்டோம், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ 15 இலட்சம் டெபாசிட் செய்வோம் என்று உறுதி அளித்தீர்கள் அதனையும் பொறுத்துக்கொண்டோம். ஆனால், கடவுள் நம்பிக்கையில், கடவுள் ராமர் விவகராத்தில் பொய்யான வாக்குறுதிகளையும், ஆசை வார்த்தைகளையும் கூறினால் பாஜகவை நாங்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என்று பேசினார்.