Published on 11/12/2021 | Edited on 11/12/2021

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தும், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். பிபின் ராவத்தின் மனைவியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இந்த துயர நிகழ்வு நாட்டையே சோகத்திற்குள்ளாகியுள்ளது.
இந்தநிலையில், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்கள் நேற்று (10.12.2021) இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன. இதையடுத்து இன்று, பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத்தின் மகள்கள், தங்கள் பெற்றோரின் அஸ்தியை தகனம் செய்யப்பட்ட இடத்திலிருந்து பெற்று, அதனை ஹரித்துவாரில் உள்ள கங்கையில் கரைத்துள்ளனர்.