Published on 25/01/2019 | Edited on 25/01/2019
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன் பின் குடியரசுத் தலைவரும் ஒப்புதலுடன் அது அரசிதழிலும் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து குஜராத் மாநிலம் முதன்முதலாக இந்த இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு பணிகளில் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மத்திய அரசு பணிகளில் ஆட்சேர்ப்பு நடைபெறும்போது, இந்த 10 சதவீத இடஒதுக்கீடு திட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.