Published on 28/08/2021 | Edited on 28/08/2021

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில், அரசின் கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது கரோனா கட்டுக்குள் இருந்துவருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரம் என்ற அளவில் தற்போது இருந்துவருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புவரை தினசரி 70 முதல் 80 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவந்தது. புதிய சாதனையாக நேற்று (27.08.2021) ஒரேநாளில் ஒருகோடி தடுப்பூசி இந்தியா முழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் 28 லட்சம் பேருக்கும், கர்நாடகாவில் 10 லட்சம் பேருக்கும், தமிழ்நாட்டில் 3.73 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.