Skip to main content

“நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது...அடுத்த வாரம் முக்கியமான வழக்குகளை கையாளுகிறேன்” - ரஞ்சன் கோகாய்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். தலைமை நீதிபதி மீது வைக்கப்பட்ட இந்த பாலியல் குற்றச்சாட்டால் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
 

ranjan gogoi

 

 

இந்த நிலையில் ரஞ்சன் கோகாய் குற்றச்சாட்டு குறித்து தெரிவித்தது. “உச்சநீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தகுந்த முறையில் நடத்தப்படுகின்றனர். பாலியல் புகார் கூறும் பெண் ஒன்றரை மாதம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார். அப்போதே இந்த புகார் வந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது அவசியமில்லை என கருதினேன். எனது பதவிக்காலம் முடியும் வரை பயமில்லாமல் பணியாற்றுவேன். நீண்ட புகார் ஒன்றை கூறிவிட்டு உடனடியாக பதிலளிக்க 10 மணி நேரம் கொடுத்தார்கள். நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. 20 வருடங்களாக தூய்மையாக பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்த புகாரை கருதுகிறேன். அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்