இந்திய நாடாளுமன்றத்தில், மன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப இரண்டு தொலைக்காட்சிகள் செயல்பட்டு வந்தன. இதில் லோக்சபா டிவி, மக்களவை நிகழ்வுகளையும், ராஜ்யசபா டிவி, மாநிலங்களவை நிகழ்வுகளையும் ஒளிபரப்பி வந்தன. இந்த இரண்டு தொலைக்காட்சிகளையும் ஒன்றிணைக்க, குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் இணைந்து குழு ஒன்றை அமைத்தனர். அந்தக் குழு, இரண்டு தொலைக்காட்சிகளையும் இணைப்பது குறித்து ஆராய்ந்து வந்தது.
இந்நிலையில் இன்று (02.03.2021) இரு தொலைக்காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்ட இந்த தொலைக்காட்சிக்கு ‘சன்சாத் டி.வி’ (SANSAD TV) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ,எஸ் அதிகாரியான ரவி கபூர், இந்த தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருட காலம் அல்லது மறு உத்தரவு வரும்வரை அவர் சன்சாத் டிவியின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.