தனியார் தொலைக்காட்சியில் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. இந்த நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். தற்போது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி 11 வது சீசன் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுதம்குமார் பங்கேற்றுள்ளார். இவர் அமிதாப் பச்சன் கேட்ட 15 கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 16 கேள்வியில் 15 கேள்விக்கு சரியான பதிலை கூறியுள்ளார். இதனையடுத்து அமிதாப் பச்சன் கேட்ட 16 வது கேள்விக்கு விடை தெரியாததால் அவர் ரூ 7 கோடியைத் தவறவிட்டார்.
இதனால் அந்த நிகழ்ச்சியை பார்த்த பலரும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுதம்குமார் ஒரு ரயில்வே இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் பதில் சொல்லாமல் விட்ட 16 வது கேள்வி என்னவென்று தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமுடன் இருந்தனர். 16 வது கேள்வியாக தென் ஆப்ரிகாவில் காந்தியின் உதவியுடன் அமைக்கப்பட்ட மூன்று கால்பந்து கிளப்புகள் பெயர் என்ன? என கேட்கப்பட்டது. இதில் கவுதம் குமார் தவறாக பதில் அளித்தார்.இதனையடுத்து கவுதம் குமார் ஜா ஒரு கோடி பரிசு தொகையுடன் போட்டியிலிருந்து வெளியேறினார். இதற்கு முன்னதாக நடந்த போட்டியில் சனோஜ் ராஜ் , மற்றும் பபிதா டாடே ஆகியோர் ஏற்கனவே ஒரு கோடி பரிசு பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.