மராட்டிய மாநிலம் புனேவில் நடந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்ச்சி முடிவின் கடைசிப் பாடலை பாடிக் கொண்டிருந்த பொழுது காவலர் ஒருவர் மேடையில் ஏறி நிகழ்ச்சியை முடித்துக் கொள்ளும்படி தெரிவித்ததற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் புனே நகரில் ராஜ்பகதூர் திறந்தவெளி அரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பத்து மணியைக் கடந்து நிகழ்ச்சி நடந்தபோது காவல்துறை அதிகாரி ஒருவர் மேடையில் ஏறி தடுத்து நிறுத்தினார். அப்பொழுது அந்த இசை நிகழ்ச்சியின் கடைசிப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது காவலர் ஒருவர் நிகழ்ச்சி மேடையில் ஏறி அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நிறுத்திக் கொள்ளும்படி தெரிவித்துவிட்டு கீழே இறங்கினார். கீழே இருந்த ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் காவல்துறை அதிகாரியின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.