புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், புதுச்சேரியில் ஏற்கனவே 3 பேர்க்கு கரோனா தொற்று உள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புடைய நபர்களின் உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மொத்தம் 49 பேருக்கு சோதனை அனுப்பட்டதில் மூலக்குளம் பகுதியில் ஏற்கனவே தொற்றுவால் பாதிக்கப்பட்டவரின் மகனுக்கு தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3 ஆக இருந்தது தற்போது 4 ஆக உயர்ந்துள்ளது. இவர் கரோனா தொற்றுநோய் பிரிவில் சேர்க்கப்பட்டுளனர். அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தி உள்ளார்கள்.புதுச்சேரி மாநில மக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால், 3 நாட்களுக்கு ஒருமுறை கடைகள் மூடப்படும் என்றே தெரிவித்திருந்தேன். அரசின் சார்பில் இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை. சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்ததால் மக்கள் சிலர் கடைகளில் குவிந்தனர். கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்காமல் தொடர்ந்து தற்போது உள்ள நடைமுறையே தொடரும். நாளை பாரத பிரதமர் அனைத்து முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் பேச உள்ளார். புதுச்சேரி சார்பாக எனக்கு பேச வாய்ப்பளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசானது பட்ஜெட்-ல் ஒதுக்கப்பட்ட மதிப்பில் 4 ல் ஒரு பங்கு கொடுத்திருக்கிறது. கரோனா நிதி என்று வழங்கவில்லை. மத்திய அரசு துணி கடைகள், எலெட்ரானிக் கடைகள், புத்தக கடைகள், நகை கடைகள் திறக்க கூறியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். 50 சதவீத ஊழியர்களை மட்டும் பணிக்கு வைத்து, சமூக இடைவெளியை பின்பற்றி, கிருமி நாசினி கொண்டு உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும். அதேசமயம் மதுக்கடைகள் திறக்க அனுமதியில்லை.
மஞ்சள் அட்டை தாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் அரிசி வழங்கப்படும்’ என்று கூறினார்.