Skip to main content

ட்ரம்ப் வருகைக்காக 100 கோடி செலவு..? - பிரியங்கா காந்தி கேள்வி!

Published on 22/02/2020 | Edited on 23/02/2020

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளனர். இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு ட்ரம்ப் செல்கிறார். அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும் திறந்து வைக்கின்றனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.



ட்ரப்பிற்கு குஜராத்தின் புகழ்பெற்ற உணவு வகைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்காக குடிசை பகுதிகளை மறைப்பது, புதிய சாலைகள் போடுவது என்று குஜராத் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், ட்ரம்பின் வருகைக்காக 100 கோடி செலவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக குழு அமைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். ஏன் அதுதொடர்பாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்