Skip to main content

நீதிபதியின் மீது காலணியை வீசிய கைதி; நீதிமன்றத்தில் பரபரப்பு!

Published on 24/12/2024 | Edited on 24/12/2024
Prisoner throws slipper at judge

மும்பையில் கொலை வழக்கு தொடர்பாக கிரன் சந்தோஷ் பரம்(22) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு தானே கல்யாண் நகர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதி, ஆ.ஜி.வக்மாரே முன்பு  விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, கிரன் சந்தோஷ் பரம் தனது வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நீதிபதி, உங்கள் தரப்பு வழக்கறிஞர் மூலம் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், கிரன் சந்தோஷ் பரம் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிபதி ஆ.ஜி.வக்மாரே வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த குற்றம்சாட்டப்பட்ட கிரன் சந்தோஷ் பரம், கீழே குணிந்து தனது காலனியை கழட்டி நீதிபதியின் மேல் வீசியுள்ளார்.  நீதிபதியின் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அங்கிருந்த போலீசார் கிரன் சந்தோஷ் பரமை அழைத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து, அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாBNS) 132, 125 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்