அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரசியல் வியூகங்கள் அமைக்கும் ஐ-பேக் அமைப்பின் தலைவரான பிரசாந்த் கிஷோர் பீகாரின் ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் அங்கம் வகித்து வந்தார். குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் பிரசாந்த் கிஷோருக்கும், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கட்சிக்குள் குழப்பங்கள் நீடித்து வந்தன.
இந்நிலையில். பிரசாந்த் கிஷோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், ‘‘நிதிஷ்குமாருக்கு நன்றி. பீகார் முதல்வராக பதவியை தக்க வைத்துக் கொண்ட அவருக்கு எனது வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு அருள்புரிவார்’’ எனக் கூறியுள்ளார்.