Skip to main content

தாக்கப்பட்ட அரசு பேருந்து ஊழியர்கள்! வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Pondicherry Government road transport employees in struggle

 

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக அரசு பேருந்து ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே பேருந்து இயக்குவது தொடர்பாக பிரச்சனைகள் இருந்துவருகிறது. இதன் காரணமாக அரசின் சாலைப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தனியார் பேருந்து ஊழியர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து இன்று போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

இதனால் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் புதுச்சேரி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் சென்னை, திருப்பதி, பெங்களூரு, மாகி, குமுளி ஆகிய வெளிமாநில பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனினும் தமிழக அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் நெரிசல் காரணமாக பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்