Skip to main content

ஹனிபிரீத் சிங்கை கைதுசெய்ய முடியாமல் திணறும் ஹரியானா போலீஸ்!

Published on 26/09/2017 | Edited on 26/09/2017
ஹனிபிரீத் சிங்கை கைதுசெய்ய முடியாமல் திணறும் ஹரியானா போலீஸ்!

சர்ச்சைக்குரிய சாமியார் ராம் ரஹீம் சிங் தனது பக்தைகள் இருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.30 லட்சம் அபராதம் விதித்தும் ஹரியானா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் உருவாகியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ராம் ரஹீம் சிங்கின் மகளை ஹரியானா காவல்துறை தேடி வருகிறது.



நேபாளத்திற்கு தப்பிச்சென்றிருப்பார் என தகவல் வந்த நிலையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும், ரகசிய தகவலின் பேரில் ஹனிபிரீத்தைக் கைது செய்வதற்கான கைது வாரண்டுடன் டெல்லி சென்ற பன்ச்குலா காவல்துறையினர், கைலாஸ் பகுதியில் உள்ள ஹனிபிரீத் உடன் தொடர்புடையுடையவரின் வீட்டில் சோதனை நடத்தினர். இருந்தபோதிலும் ஹனிபிரீத் அங்கு கிடைக்கவில்லை. 

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவருக்கு முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளதாக ஹனிபிரீத் சிங்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்