Skip to main content

“காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” - பிரதமர் மோடி

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

"Women are not safe under Congress rule" - PM Modi

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

 

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் 30ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று (23-11-23) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. அதையொட்டி, பா.ஜ.க சார்பில் கடைசி நாள் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையைப் போல வேறு எந்த ஆட்சியிலும் நடந்தது இல்லை. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைய இங்குள்ள எந்த பெண்களும் விரும்பவில்லை. 

 

எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்கள், மோடியை தாக்கி பேசினால் அவர்களுடைய வேலை முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு பா.ஜ.க.வின் வலிமை புரியவில்லை. காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு எதிரான கட்சி. குறிப்பாக நாட்டில் உள்ள பழங்குடியின மக்களுக்கு காங்கிரஸ் இதுவரை எந்தவித நன்மையும் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிக்காக உயிரே கொடுக்கும் நபர்களை அந்த கட்சி மதிப்பதில்லை. சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட்டை காங்கிரஸ் கட்சி ஒதுக்கியே வைத்திருந்தது” என்று பேசினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்