Published on 07/11/2020 | Edited on 07/11/2020

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் 66- ஆவது பிறந்தநாளையொட்டி, பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கமல்ஹாசனுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், "அன்புள்ள கமல்ஹாசனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இந்நாள் மட்டுமின்றி எதிர்வரும் ஆண்டும் அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.