Published on 14/11/2018 | Edited on 14/11/2018

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் எனும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி வழக்கறிஞர்கள் முறையிட்டதை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் முறையிட்டிருந்தார். இந்நிலையில் ஜனவரி 22க்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜனவரி 22 ஆம் தேதிக்கு முன்பே கார்த்திகை மாத பூஜை வர இருப்பதால் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கேரள அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.