Skip to main content

24 பேரை சங்கிலியால் கட்டி "கோமாதாக்கு ஜே" என கூற சொல்லி தாக்கிய கும்பல்...(வீடியோ)

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

மாடு திருடர்கள் எனக் கூறி 24 பேரை பிடித்து ஓன்றாக சங்கிலியால் கட்டி கோமாதாக்கு ஜே என கோஷமிட்ட சொன்ன சம்பவம் மத்தியபிரதேசத்தில் நடந்துள்ளது.

 

people forced to say gau matha ki jay

 

 

மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து மகாராஷ்டிராவில் நடைபெறும் கால்நடை சந்தைக்காக, அப்பகுதியில் உள்ள சிலர் ஒரு வேனில் 20 பசுமாடுகளை ஏற்றி சென்றுள்ளனர். அப்போது அந்த வேன் மத்தியப்பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தின் சாவலிகேடா என்ற கிராமத்தை அடைந்த போது 100 க்கும் மேற்பட்ட மக்கள் அந்த வாகனத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

மாடுகள் குறித்து கேட்டபோது, அவை தங்களது சொந்த மாடுகள் என வேனில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர். இதற்கான ஆவணங்கள் என்ன இருக்கின்றன என கேட்ட அந்த கும்பல், வேனில் இருந்தவர்களை கீழே இறக்கி அவர்களை தாக்கியுள்ளது. பின்னர் அவர்களை சங்கிலியால் கட்டி, கோமாதாக்கு ஜே என கோஷமிட்ட கூறியுள்ளனர். மேலும் அனைவரையும் சாலையில் முழங்காலிட வைத்து கோஷமிட வைத்துள்ளனர்.

பின்னர் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை நடக்க உள்ள மத்தியபிரதேச சட்டமன்ற கூட்டத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அடுத்தவர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 5 வருடங்கள் வரை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்ட திருத்தும் கொண்டுவரப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று நடந்துள்ள இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்