உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்குக் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த மேற்குவங்கத்தில், தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதன் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (12.02.2021) முதல் ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பை மாநில அரசு கடந்த வாரமே அறிவித்தது.